விசுவாச அறிக்கை

நமது பூரண சுவிசேஷ விசுவாசத்தைப் பற்றிய அறிக்கை (சுருக்கம்)

(வசனங்களை விதைக்கிறவன் ஊழியங்கள்)

1. கர்த்தருடைய வசனம் வேதாகமம் ஆகும். வேத புத்தகமே, நமது விசுவாசத்தின் அஸ்திபாரமும், அதிகாரமும் ஆகும். மூல வடிவத்தில் (original form) வேதம் பிழை-யற்றதாகும். (வேத-வசனத்தை அவமாக்காமல், குடும்ப பாரம்பரியங்-களுக்கும், சபைப்-பிரிவுகளின் பாரம்பரியங்-களுக்கும் விலகுங்கள். வேத-வசனங்களை அறிக்கையிட்டுக் கொண்டே இருங்கள்; நாவைக் காத்துக்-கொள்ளுங்கள்.)

 

2. பிதவாகிய தேவன் ஒருவரே, வேறே தேவன் இல்லை. அவரில் அன்பு-கூர்ந்து, அவரைத் தொழுது கொள்ளுங்கள்.

 

3. நசரேயனாகிய இயேசு தேவனுடைய ஒரே பேரான குமாரன். அவர் மேசியா-வாகிய கிறிஸ்து. அவர் கர்த்தர். தேவன் நம் மேல் இவ்வளவாய் அன்பு-கூர்ந்து இயேசுவை நமக்கு இரட்சக-ராகவும், மீட்ப-ராகவும் தந்தருளி-னார். உலகத்தின் பாவத்திற்கு பாவ-நிவாரண பலியாக, இயேசு பாடுகள்-பட்டு, சிலுவையில் மரித்தார்;. அடக்கம் பண்ணப்பட்டார், உயிர்த்தெழுந்து அநேகருக்கு தரிசனமானார்;, பரமேறினார்;, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து, நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்.; அவர் திரும்பவும் வரப்போகிறார்.

 

4. கிறிஸ்துவின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர் கர்த்தர். (பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை மட்டுப்-படுத்தா-திருங்கள்; அவித்துப் போடா-திருங்கள் – ஆவியின் வரங்களையும், ஆவியின் கனியை-யும், ஆவியானவரின் வழி-நடத்து-தலையும்….)

 

5. திரியேகத்து-வத்தை விசுவாசிக்கிறோம் – பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.

 

6. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, மரித்தோரின் உயிர்த்-தெழுதல், நித்திய நியாயத்-தீர்ப்பு, நித்தியம் – (மரணத்திற்குப் பின் மனுபுத்திரர் யாவருக்கும் வரும் நித்திய காலம்) நித்திய ஜீவன், தேவனுடைய இராஜ்யம் (பரலோகம்) உண்டு என்று விசுவாசிக்கிறோம்.

 

7. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்தை (நற்செய்தியை) அறிவியுங்கள்; சீஷர்களாக்குங்கள்; (பெரியவர்களுக்கான தண்ணீர் முழுக்கு) ஞானஸ்நானம் கொடுங்கள்; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்க உபதேசம் பண்ணுங்கள்.

 

8. சபை (உள்ளூர் சபை) கூடிவருதலை விட்டு-விடாதிருங்கள்.

 

9. நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற வேண்டும்

 

10. விசுவாசி மறுபடியும் பிறக்க வேண்டும் (மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும்; சத்திய வசனத்தினாலே ஜெனிப்பிக்கப்படுதல்;, தேவனாலே ஜெனிப்பிக்கப்படுதல் …..)

 

11. கிறிஸ்தவ விவாகம் / கிறிஸ்தவ இல்லம் : விவாகம் ஒரு உடன்படிக்கை ஆகும்; விவாக-மஞ்சம் பரிசுத்தத்துடன் காக்கப்பட வேண்டும். கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

 

12. தேவனுக்கு தசமபாக்தையாவது செலுத்துங்கள்; காணிக்கையும் கொடுங்கள். காணிக்கை என்பது தசம பாகத்திற்கு மேல், தேவனுக்கு மனமுவந்து கொடுப்பதாகும்.

 

13. ஆவிக்குரிய சோர-மார்க்கமாகிய அந்நிய தேவர் வணக்கத்துக்கும், விக்கிரக ஆராதனைக்கும், பில்லி-சூனியங்-களுக்கும், …வேசித்-தனத்துக்கும் விலகி ஓடுங்கள்.

 

14. கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள், சபையில் ஊழியம் செய்யுங்கள் – விசுவாசிகளின் மத்தியில். உலகத்தாருக்கு – இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறியாதவர்களின் மத்தியில் ஊழியம் செய்யுங்கள். ஐசுவரியத்தையும், பணத்தையும் புகழையும், மனித அங்கீகாரத்தையும் மாத்திரம் சார்ந்திராமல் – தேவ சித்தத்தை நிறைவேற்ற தேவ அங்கீகாரத்தையே நாடுங்கள்.

 

15. பொய்த்துவங்களைக் (பொய், போலி – falsehood) குறித்து எச்சரிக்கையாயிருங்கள் :
கள்ள போதனைகள், கள்ள உபதேசங்கள், கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள தீர்க்கதரிசிகள், கள்ள சகோதரர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கள்ள மார்க்கங்கள் …. இவைகளைக் குறித்து எச்சரிக்கை-யாயிருங்கள்

 

16. கிறிஸ்துவின் அன்பினால் ஒருவரை-யொருவர் தாங்கி, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்து …. பரிசுத்த ஆவியின் ஒருமையைக் காத்துக் கொண்டு …. கிறிஸ்துவைப் பற்றிய விசுவாசத்தில் ஒருமைப்-பட்டவர்களாகும் வரைக்கும் ….